Tumgik
#விவசாயம்
anbumiththiran · 8 months
Text
உலகம் எதை நோக்கிப் பயணிக்கிறது?
“தான் வெற்றி பெற யாரையும் வீழ்த்தலாம் என்னும் நரி தந்திரங்களில் ஊறிப் போய் கொண்டிருக்கும் மனநிலையை எவரிடமும் காண முடிகிறது.” சாமானியர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருக்கும் போது, இங்கு பணக்காரர்கள் நரித்தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சாமானிய மக்களிடமும் தொழிற்நுட்பம் சென்றடைய வேண்டும் என்று சில நிறுவனங்கள் குறைந்த விலையில் மொபைல் போன்களை விற்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு.…
View On WordPress
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
vallimayilme · 1 year
Video
youtube
தைப் பொங்கல் 2023 | பொங்கல் வைக்க வேண்டிய நல்ல நேரம் & வழிபடும் முறை | A...
0 notes
senthilkumarvision · 2 months
Text
விவசாய பணிகளில் அறுவடை எந்திரங்களின் வருகைக்குப் பிறகு மக்காச்சோளம், உளுந்துப் பயிறு போன்றவைகளை அறுவடை செய்வதில் துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இளைய தலைமுறையினரிடம் விவசாயம் செய்வதில் ஆர்வம் அதிகமாக அறுவடை எந்திரங்களின் வருகையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இந்த எந்திரங்கள் சிறிய சாலைகளில் வரும்போது எதிர்வரும் பெரிய வாகனங்கள் கடந்து செல்வதற்கு காலதாமதம் ஏற்படும். சாலைகள் விரிவாக்கம் அடையும்போது இதனுடைய பணிகளும் எளிதாகும்.
விவசாய பணிகளுக்கு மனித சக்திகள் குறைந்துவிட்ட இப்போதைய கடினமான காலகட்டத்தில் அறுவடை எந்திரங்களே விவசாயத்தை மீட்டெடுத்துள்ளதை, நாம் பார்க்கிறோம்.
புகைப்படம்: கழுகுமலை சாலையில் பயணிக்கும் அறுவடை எந்திரம்.
Tumblr media
1 note · View note
nidurali · 4 months
Text
Agriculture விவசாயம்
youtube
0 notes
tnsfrbc · 5 months
Text
கல்வி ?? விவசாயம்?? இன்றைய இளைஞர்கள் ??
youtube
0 notes
bharathidasanprabhu · 7 months
Text
பாரம்பர்ய விவசாயம், பறவைகள் சரணாலயம், பன்னாட்டுப் பள்ளி... பிரமிக்க வைக்...
youtube
0 notes
indianfarm · 9 months
Text
Tumblr media
0 notes
eluckstoken · 10 months
Text
Elucks: Paving the Way for Decentralized Financial Systems
நிதி தொழில்நுட்பத்தின் எப்போதும் உருவாகி வரும் நிலப்பரப்பில், பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) ஒரு சீர்குலைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது, பாரம்பரிய நிதி அமைப்புகளுக்கு சவால் விடுகிறது மற்றும் உலகளாவிய பங்கேற்பிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது. DeFi ஸ்பேஸில் உள்ள டிரெயில்பிளேசர்களில், எலக்ஸ் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. அதன் மையத்தில், எலக்ஸ் ஒரு பரவலாக்கப்பட்ட தளமாகும், இது பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் பியர்-டு-பியர் நிதி சூழலை வழங்குவதற்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எலக்ஸ் இடைத்தரகர்களின் தேவையை நீக்குகிறது, பயனர்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக நிதி நடவடிக்கைகளில் ஈடுபட உதவுகிறது. இந்த அதிகாரப் பரவலாக்கம் செலவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், அதிக சுயாட்சி மற்றும் தனிப்பட்ட சொத்துகள் மீதான கட்டுப்பாட்டையும் உறுதி செய்கிறது. Elucks அதன் பயனர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஏராளமான சேவைகளை வழங்குகிறது. கடன் கொடுப்பது மற்றும் கடன் வாங்குவது முதல் மகசூல் விவசாயம் மற்றும் ஸ்டாக்கிங் வரை, இந்த தளம் செல்வத்தை உருவாக்குவதற்கும், வேகமாக வளர்ந்து வரும் DeFi சந்தையில் பங்கு பெறுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. ஸ்டாக்கிங் மற்றும் பணப்புழக்கம் மூலம் வெகுமதிகளைப் பெற பயனர்களை அனுமதிப்பதன் மூலம், எலக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பில் செயலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது. Elucks இன் முக்கிய நன்மைகளில் ஒன்று, நிதி உள்ளடக்கத்திற்கு அதன் முக்கியத்துவம் ஆகும். பாரம்பரிய நிதி அமைப்புகள் பெரும்பாலும் உலக மக்கள்தொகையில் கணிசமான பகுதியைத் தவிர்த்து, எலக்ஸ் வங்கியற்ற மற்றும் குறைந்த வங்கிகளுக்கு கதவைத் திறந்து, அவர்களுக்கு அத்தியாவசிய நிதிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. DeFi இடம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், எல்லைகளைத் தள்ளுவதற்கும் பரவலாக்கப்பட்ட நிதி அமைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும் Elucks உறுதியுடன் இருக்கிறார். மிகவும் அணுகக்கூடிய, வெளிப்படையான மற்றும் திறமையான நிதிச் சூழலை உருவாக்குவதன் மூலம், புவியியல் எல்லைகள் அல்லது நிறுவனத் தடைகளால் கட்டுப்பாடற்ற உலகப் பொருளாதாரத்தில் அனைவரும் பங்கேற்கக்கூடிய எதிர்காலத்திற்கு எலக்ஸ் வழி வகுக்கிறது.
0 notes
topskynews · 1 year
Text
டோக்கியோ கல்லூரியில் பேராசிரியராகும் ஜாக் மா..!
டோக்கியோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் புதிய அமைப்பான டோக்கியோ கல்லூரியில் வருகை பேராசிரியராக அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா அழைக்கப்பட்டுள்ளார். 58 வயதான மா, இன்றைய தினம் பள்ளியில் வருகை பேராசிரியராக சேர்ந்தார். குறிப்பாக ஆராய்ச்சி தொடர்பான கற்கைநெறிகளுக்காக பேராசிரியராக இணைந்துள்ளார். டோக்கியோ பல்கலைக்கழகம்  இங்கு நிலையான விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி, அத்துடன் தொழில்முனைவு மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
rajnandanibansal · 1 year
Link
0 notes
dearmaayavi · 1 year
Text
A படத்திற்கு 44 இல் வெட்டுங்கள்
A படத்திற்கு 44 இல் வெட்டுங்கள் 18 ஏப்ரல், 2023 – 19:12 IST எழுத்துரு அளவு: மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஒரு படம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது ஆபாசப் படம் அல்ல… இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பற்றிய படம். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுடன், ஜாதி, மதம், கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பேசும் வணிகப்…
Tumblr media
View On WordPress
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
tamilnewspro · 1 year
Text
தலைமை வேளாண் விஞ்ஞானிகளின் மூன்று நாள் ஜி20 கூட்டம் வாரணாசியில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
வெளியிட்டது: பிரகதி பால் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 16, 2023, 19:30 IST வாரணாசி (பனாரஸ்), இந்தியா வாரணாசியில் நடைபெறும் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 80 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். (பிரதிநிதித்துவ படம்: AP) கூட்டத்தின் கருப்பொருள் “நிலையான விவசாயம் மற்றும் ஆரோக்கியமான மக்கள் மற்றும் கிரகத்திற்கான…
Tumblr media
View On WordPress
0 notes
senthilkumarvision · 12 years
Text
நமது கிராமம் குளக்கட்டாக்குறிச்சி  - இணையதளம் உருவாக்க முக்கிய காரணம் என்னவெனில்...
குளக்கட்டாக்குறிச்சி கிராமம் ~ திருநெல்வேலி மாவட்டம் ~ சங்கரன்கோவில் தாலுகா ~ குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து - கழுகுமலையிலிருந்து 8 கி.மீ ~ கோவில்பட்டியிலிருந்து 18 கி.மீ ~ நடுவப்பட்டியிலிருந்து 4 கி.மீ.
ஒவ்வொரு நாட்டிற்கும் பல மகத்தான வரலாறு உள்ளது. நாட்டிலுள்ள மாநிலத்திற்கும், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு ஊருக்கும் பல சிறப்புகள் உள்ளது. அப்படி பார்க்கும்போது நமது குளக்கட்டாகுறிச்சி கிராமத்திற்கும் பல பெருமைகள் உள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு விதமான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. பல்வேறு விதமாக தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளன. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நமது ஊருக்கு போக்குவரத்து வசதிகள் அதிகமாக கிடையாது. கல்வி கற்க வேண்டுமென்றால் உள்ளூரில்தான் படிக்க வேண்டும். இல்லையென்றால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். 1987ல் ஊரில் அனைத்து குடும்பங்களும் விவசாய வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள். ஊரில் என்னை போன்ற சிறுவயது இளைஞர்கள் 30 பேருக்கு மேல் இருப்போம். எந்த வித சாதி பாகுபாடுமின்றி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நீச்சல், சில்லாங்குசி, கள்ளன்-போலீஸ், கிரிக்கெட், கபடி விளையாட்டு என்று ஊரையே அமர்ககளப்படுத்துவோம். அப்போதைய 1988ம் ஆண்டுகளில் ஊரில் கள்ளசாராய விற்பனை அமோகமாக நடக்கும். அதை குடிப்பவர்களை வேண்டா வெறுப்பாக பார்ப்போம். அப்போது தொலைக்காட்சி பெட்டி ஊர் பஞ்சாயத்தில் (மடம்) மட்டுமே இருக்கும். அதில் சினிமாபடம் பார்க்க ஊரே கூடிவிடும். அன்றைய காலகட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை, ஊர் மக்களை சுற்றுலா அழைத்து செல்வதற்கு பூசாரி என்பவர் இருந்தார். சுற்றுலா சென்ற காலமெல்லாம் எங்கள் சிறுவயது வசந்த காலங்கள்.
1990களில் விவசாயம் அமோகமாக நடைபெற்றது. நமது ஊரின் தொழிலாளார்கள் தன்னலமின்றி விவசாயம் செழிக்க பாடுபட்டார்கள். நமது ஊரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல சிறப்புகள், பாரம்பரியங்கள் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய மிகபெரிய ஆவல்.
மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் பல குடும்பங்கள், பல ஊர்களுக்கு சென்று  குடியேறிவிட்டார்கள். வேலை நிமித்தமாக அவர்களால் ஊருக்கு அடிக்கடி வரமுடிவதில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும், அவர்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு ஊரை பற்றியும், ஊரிலுள்ள மக்களை பற்றியும் தெரிய வாய்ப்பு குறைவுதான். நமது கிராமத்தைப் பற்றி பல குடும்பளுக்கும், நமது கிராமத்தின் மீது பற்றுதலை உருவாக்குவதே இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம்.
நமது கிராமத்தை நான் அதிகமாக நேசிப்பதுபோல, கிராமத்தின் மக்களையும் நேசிக்கிறேன். அதேபோல், நாம் வாழும் இந்த இந்திய தேசத்திற்கும் மகத்தான பல நற்காரியங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னுள் உள்ளது. இலக்கியம், வரலாற்றுப் புத்தகங்களை தினம்தோறும் படிப்பதுண்டு. சமூக மாற்றத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு.
ஒரு நாட்டின் முதுகெலும்பே கிராமங்களில்தான் உள்ளது என்று நமது தேசப்பிதா மாகாத்மா காந்தி  கூறியிருக்கிறார். கிராமங்களிலும் காலாச்சாரம் மற்றும் பண்பாடு உள்ளது. இதை வேறு எங்குமே காண முடியாது. நமது கிராமதிலிருந்து பல பெரிய மனிதர்களும், இப்போதுள்ள இளைஞர்களும் நமது இந்திய தேசத்திற்காக, இந்திய ராணுவத்தில் சேர்ந்து அவர்கள் வாழ்க்கையையே தியாகம் செய்வதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.
கனகராஜ், கற்பகராஜ், ஹரிகேசவன், விக்னேஸ்வரன், சீனிவாசகன் மேலும் சில பேர் தற்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.  கணேசன் என்பவர் இந்திய ராணுவத்தில் எல்லை காவல் படையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். நமது கிராமத்தில் பிறந்த சீனிவாசன் நாயக்கர், இந்திய ராணுவத்தில் 36 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் ராணுவத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தற்சமயம் நமது கிராமத்திலேயே வசித்து வருகிறார். 
ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால்.. மது என்னும் கொடிய அரக்கனின் பிடியிலிருந்து, மது அருந்துபவர்கள் விடுதலை அடைய வேண்டும். தனிமனிதனுக்கு மது எனும் பானம் தரும் இன்பம்.. கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பவரையும், அவர்கள் சார்ந்த குடும்பத்தையுமே முற்றிலுமாக சர்வநாசம் செய்து அழிக்கக்கூடியது.
சாதிப் பாகுபாடற்ற கிராமமாக, குளக்கட்டாகுறிச்சி கிராமம் உருவாக வேண்டும் என்பது என்னை போன்ற பல இளைஞர்களுடைய ஆவல்.
இன்றைய சூழ்நிலையில் நமது ஊரிலிருந்து பல இளைஞர்கள் கணிப்பொறி வல்லுனர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும் உருவாகி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் சேர்ந்து நமது கிராமத்திற்கு வருங்கால சந்ததிகள் அரசாங்க பதவிகளுக்கு வரக்கூடிய, கல்வி கற்க நூலகங்கள் கட்டித்தரவேண்டும். ஒவ்வொரு ஏழை மாணவனும் கல்வி கற்க்கக்கூடிய பொருளாதார சூழ்நிலைகள் உருவாகவேண்டும்.
நமது ஊரின் ஒவ்வொரு சாராசரி மனிதருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை இந்த இணையதளத்தில் கொண்டு வருவது இனிவரும் நாட்களில் என்னைப் போன்ற இளைஞர்களின் செயல்பாடாக இருக்கும்.
இந்த இணையதளத்தை உருவாக்குவது பற்றி நேரிலும், அலைபேசியிலும் சிலரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, மகத்தான ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்திருக்கிறார்கள். நான் ஒருவன் மட்டுமே இந்த மாபெரும் பணியை செய்யப்போவதில்லை. ஆர்வமுள்ள அனைவருமே இதில் பங்கெடுத்துக் கொண்டு சீரிய பணியாற்றுவார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலுள்ள காலம் சென்ற மனிதர்களின் புகைப்படங்களை சேகரித்து, அவர்கள் நமது கிராமத்திற்கு செய்த நற்க்காரியங்களை அனைவரும் தெரிந்துகொள்ள வகை செய்வது சிறப்புக்குரிய அம்சமாகும். நான் சில பெரியவர்களிடம் அலைபேசியில் அழைத்து பேசியபிறகு, அவர்களது அனுபவங்களை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.
ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியிருக்காவிட்டால், அவரது பெருமையை உலகம் அறிந்திருக்காது. இயக்குநர் பி.ஆர் பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை எடுத்ததாலே.. பிரிட்டீஷாரை கண்டு ராஜபேரிகை முழக்கம் செய்து மாவீரனாக வாழ்ந்த கட்டபொம்மனின் வீரத்தை உலகமே கண்டு வியந்தது. இந்தியாவெங்கும் சுற்றியலைந்த சுவாமி விவேகானந்தர் அவ���்கள்.. நமது இந்திய தேசத்தின் பெருமையை உலகம் அறியச் செய்தார். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், 2013ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அவர்களின் 150வது பிறந்த வருடமாகும்.
வரலாறு என்பது நமக்கு மிகப்பெரிய படிப்பினையை உணர்தக்கூடிய  பொக்கிஷமாகும். இன்றைய சூழ்நிலையில் பெரியவர்களிடம் அன்பு, பரிவு, பாசம் குறைந்து வருகிறது. அடுத்த 10, 15 வருடத்திற்குள் இந்திய அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் உருவாக வேண்டும். படித்து வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, நமது கிராமத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதை உணர்த்துவதும் இந்த இணையதள உருவாக்கத்தின் முக்கிய நோக்கம்.
நமது கிராமத்து பிள்ளைகள் கற்க கூடிய கல்வியானது மனித குல முன்னேற்றத்திற்கும், நாம் வாழும் தேசத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைய வேண்டும். வெறும் பணம் சம்பாதித்து, ஆடம்பரமாக தனக்காக மட்டுமே வாழும் வாழ்க்கையை நமது கிராமத்து பிள்ளைகள் எண்ணக்கூடாது.
நாம் வாழும் சமூகத்தில் பாறைகளாக புரையோடிப்போன பழமைகளை உடைத்தெறிந்து, புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள், புதிய சித்தாந்தங்களை நமது கிராமத்து இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கம்.
நமது ஊரில் உருவாகப்போகும் எதிர்கால சந்ததிகளுக்கு, நமது வாழ்க்கை, நமது  கலாச்சாரம், நமது பண்பாடு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பதே இந்த இணையதளத்தின் முக்கிய அம்சம்.
இதைப்போல, நமது ஊர் மக்களின் ஒவ்வொருவரின் மலரும் நினைவுகள் தொடரும்...
புகைப்படம்: நான் எழுதும் எழுத்துக்கள் கிரியா ஊக்கியாக அமைய உறுதுணை புரிந்த அன்புச் சகோதரி ராஜேஸ்வரி..
Tumblr media
1 note · View note
nidurali · 4 months
Text
Agriculture விவசாயம்
View On WordPress
0 notes