Tumgik
#சப்பாணி
fakirmohamedlebbai · 1 year
Photo
Tumblr media
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணக்காடு சப்பாணி அவர்களுக்கு ஹார்ட் ஆப்ரேஷனுக்குகாக SDPI கட்சி மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஹுசைன் ஏற்ப்பாட்டில் கஸாலி மெடிகல் உரிமையாளர் திரு ஷேக் முகமது அவர்களால் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் எஸ். டி. பி. ஐ கட்சியின் பாளை பகுதி தலைவர் நிஜாம், கே. டி. சி நகர் கிளை தலைவர் முஹம்மது ஹாரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர். SDPI கட்சி மருத்துவ உதவி மற்றும் இரத்ததான சேவை அணியில் தங்களையும் இணைத்து கொள்ள மற்றும் அவசர ரத்ததான தேவை தொடர்புக்கு 9600207173,7092564120 9655922331,99526 97855 SDPI கட்சி மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்டம் . https://www.instagram.com/p/CokWldUPXVR/?igshid=NGJjMDIxMWI=
0 notes
dinamalars59 · 3 years
Photo
Tumblr media
https://www.dinamalar.com/news_detail.asp?id=2767143&?utm_source=promotion&utm_medium=stum&utm_campaign=seo
0 notes
sirukathaigal · 3 years
Text
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
தலைப்பு: மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
ஆசிரியர்: விந்தன்
பதிப்பகம்: அருந்ததி நிலையம், சென்னை
முதற்பதிப்பு: 2000
படிப்பதற்கு முன்: கொஞ்சம் ‘தம்’ பிடிக்க வேண்டியிருக்கலாம்; தயார��� செய்து கொள்ளவும்
“அகோ, வாரும் பிள்ளாய்!” - என்னுரை
வழக்கத்திற்கு விரோதமாக ஒரு நாள் என்னைக் கண்டதும், "அகோ, வாரும் பிள்ளாய்" என்றார் ‘தினமணி கதி’ரின் பொறுப்பாசிரியரான திரு. சாவி அவர்கள்.
"அடியேன் விக்கிரமாதித்தனா, என்ன? என்னை 'அகோ, வாரும் பிள்ளாய்!' என்கிறீர்களே?" என்றேன் நான்.
"அது தெரியாதா எனக்கு? ‘பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளைப் பின்பற்றி 'மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ என்று எழுதினால் எப்படியிருக்கும்?"
"பேஷாயிருக்கும்"
"சரி, எழுதும்!"
"என்னையா எழுதச் சொல்கிறீர்கள்?"
"ஆமாம்."
"எந்த எழுத்தாளரும் தமக்கு உதித்த யோசனையை இன்னொருவருக்கு இவ்வளவு தாராளமாக வழங்கி நான் பார்த்ததில்லையே?"
"அதனால் என்ன, என்னிடம் யோசனைக்குப் பஞ்சமில்லை; எழுதும்!" என்றார் அவர்.
"நன்றி!" என்று நான் அவருடைய யோசனைக்கு நன்றி தெரிவித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒராண்டு காலம் அது ‘கதி’ரில் தொடர்ந்தது. பலர் அதை விழுந்து விழுந்து படிக்கவும் செய்தார்கள்; சிலர் அதற்காக என் மேல் விழுந்து விழுந்து கடிக்கவும் செய்தார்கள்.
ஏன்?
இதற்கு நான் பதில் சொல்வதைவிட, அமரர் கல்கி அவர்கள் இன்றல்ல– இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லி விட்டுச் சென்றதை இங்கே நினைவூட்டினாலே போதும் என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘முல்லைக்கொடியாள்' என்ற நூலுக்கு முன்னுரை எழுதும்போது ஆசிரியர் கல்கி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
"விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு மனத்திலே பயம் உண்டாகும்..... அவருடைய கதா பாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணித் தூக்கமில்லாமல் தவிக்க நேரும்....!"
தம்மால் முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்வதையே தம்முடைய வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த அந்த அரும் பெரும் உத்தமரையே என் கதைகள் அந்தப் பாடுபடுத்தின என்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
அத்தகைய அனுபவத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ உள்ளான சிலர் 'மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைக'ளில் வரும் கதாபாத்திரங்களைத் தாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டு, இரவெல்லாம் நிஜமாகவே தூக்கமில்லாமல் தவித்திருக்கிறார்கள்; பொழுது விடிந்ததும் நிஜமாகவே அவர்கள் என்மேல் விழுந்து கடிக்கவும் வந்திருக்கிறார்கள்.
ஒருவிதத்தில் பார்க்கப் போனால் வேறு யாருக்கு நன்றி செலுத்தாவிட்டாலும் இவர்களுக்கு நான் அவசியம் நன்றி செலுத்தியே ஆக வேண்டும். ஏனெனில், "வாழ்க்கையையும், அதைப் பல வழிகளில் வாழ்ந்து காட்டும் பல்வேறு மனிதர்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுதான் உண்மையான இலக்கியம்’ என்று இக்காலத்து இலக்கிய மேதைகளும், இலக்கிய விமரிசகர்களும் கூறுகிறார்கள். இவர்களுடைய கூற்றை மேலே கண்டவர்கள் என்னைக் கடிக்க வந்ததன் மூலம் மெய்யாக்கியிருப்பதோடு, "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் உண்மையான இலக்கிய வகையைச் சேர்ந்ததுதான்" என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்திருக்கிறார்களல்லவா?
மிகுந்த மகிழ்ச்சி; நன்றி.
- விந்தன்
கதைகளின் அட்டவணை
1. முதல் மாடி ரிஸப்ஷனிஸ்ட் ரஞ்சிதம் சொன்ன அழகியைக் கண்டு அழகி மூர்ச்சையான அதிசயக் கதை
2. இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன பாதாளக் கதை
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பத்மாவதி கதை
மந்திரவாதி கதை
அகதிகள் கதை
வீர தீர சூரன் கதை
மானங் காத்த மனைவியின் கதை
கிளிக் கதை
காவற்காரன் கதை
கலியாணராமன்கள் கதை
சதிபதி கதை
காடுவெட்டிக் கதை
மெல்லியலாள்கள் கதை
நஞ்சுண்டகண்டன் கதை
தருமராசன் கதை
பார்வதி கதை
பரோபகாரி கதை
கருடன் வந்து கண் திறந்த கதை
பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணின் கதை
மணமகள் தேடிய மணமகன் கதை
நாய் வளர்த்த திருடன் கதை
தம்பிக்குப் பெண் பார்த்த அண்ணன் கதை
சீமைக்குப் போன செல்வனின் கதை
கனகாம்பரம் சிரித்த கதை
முகமூடித் திருடர் கதை
பாப விமோசனம் தேடிய பக்தர் கதை
3. மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம் சொன்ன கோபாலன் கதை
மங்களம் சொன்ன கோகிலம் கதை
மணவாளன் சொன்ன மர்மக் கதை
வேலைக்காரி சொன்ன வேதனைக் கதை
4. நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கல்யாணி சொன்ன ஆண் வாடை வேண்டாத அத்தை மகள் கதை
பண்டாரம் சொன்ன பங்காரு கதை
5. ஐந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோன்மணி சொன்ன பேசா நிருபர் கதை
பாதாளசாமி சொன்ன புதுமுகம் தேடிய படாதிபதி கதை
6. ஆறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மோகனா சொன்ன கலியாணமாகாத கலியபெருமாள் கதை
7. ஏழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் எழிலரசி சொன்ன ‘ஜிம்கானா ஜில்' கதை
8, எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா சொன்ன கார் மோகினியின் கதை
9. ஒன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நவரத்னா சொன்ன ஒரு தொண்டர் கதை
10. பத்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கனகதாரா சொன்ன நள்ளிரவில் வந்த நட்சத்திரதாசன் கதை
11. பதினோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் வித்தியா சொன்ன ஜதி ஜகதாம்பாள் கதை
12. பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா சொன்ன சர்வகட்சி நேசன் கதை
பாதாளம் சொன்ன பத்துப் புத்தகங்கள் கதை
13. பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா சொன்ன மாண்டவன் மீண்ட கதை
சப்பாணி சொன்ன காடு விட்டு வீடு வந்த கதை
14. பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி சொன்ன சந்தர்ப்பம் சதி செய்த கதை
15. பதினைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அமிர்தா சொன்ன வஞ்சம் தீர்ந்த கதை
16. பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா சொன்ன ஆசை பிறந்து அமைதி குலைந்த கதை
17. பதினேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கருணா சொன்ன கை பிடித்த கதை
18. பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா சொன்ன கள்ளன் புகுந்த கதை
19. பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா சொன்ன கன்னி ஒருத்தியின் கவலை தீர்ந்த கதை
20. இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா சொன்ன ஏமாற்றப் போய் ஏமாந்தவர்கள் கதை
21. இருபத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் இந்திரா சொன்ன காணாமற் போன மனைவியின் கதை
22. இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா சொன்ன ஒரு கூஜா கதை
23. இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி சொன்ன பேயாண்டிச் சாமியார் கதை
24. இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொன்ன கடவுள் கல்லான கதை
25. இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா சொன்ன அழகுக் கதை
26. இருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கலா சொன்ன அவமரியாதைக் கதை
27. இருபத்தேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மாலா சொன்ன கல்லால் அடித்த கதை
28. இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் ஷீலா சொன்ன கால் கடுக்க நின்ற கதை
29. இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நர்மதா சொன்ன போலீஸ்காரனைத் திருடன் பிடித்த க���ை
30. முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை சொன்ன நட்சத்திர வீட்டு நாயின் கதை
31. முப்பத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நிர்மலா சொன்ன கை குவித்த கனவான் கதை
32. முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி சொன்ன விக்கிரமாதித்தனைக் கண்ட சாலிவாகனன் கதை
0 notes
dailyanjal · 4 years
Text
‘சப்பாணி’, ‘மயிலு’, ‘பரட்டையன்’, ‘குருவம்மா’; பாரதிராஜா, இளையராஜா, கலைமணி, பாக்யராஜ், கங்கை அமரன்!  - 43 ஆண்டுகளாகியும் என்றும் பதினாறு ‘16 வயதினிலே!’
‘சப்பாணி’, ‘மயிலு’, ‘பரட்டையன்’, ‘குருவம்மா’; பாரதிராஜா, இளையராஜா, கலைமணி, பாக்யராஜ், கங்கை அமரன்!  – 43 ஆண்டுகளாகியும் என்றும் பதினாறு ‘16 வயதினிலே!’
[ad_1]
Tumblr media
ஒரு படம் என்னவெல்லாம் செய்யும்? மக்களை ரசிக்கவைக்கும். இன்னொரு முறை, இன்னொரு முறை என படம் பார்க்கத்தூண்டும். திரையிட்ட தியேட்டர்களில் ’ஹவுஸ்ஃபுல்’ போர்டு நிரந்தரமாக இருக்கும். வசூல் குவியும். படத்தில் நடித்தவர்கள் பாராட்டப்படுவார்கள். இயக்குநர் கொண்டாடப்படுவார். வரிசையாக படங்கள் கிடைக்கும். நடித்தவர்களும் கேரக்டர்களும் கேரக்டர்களின் பெயர்களும் மனதில் பதிந்துவிடும். பாடல்கள் ஹிட்டாகும்.…
View On WordPress
0 notes
slsathish1306 · 4 years
Text
பருவங்கள்
ஆண் குழந்தைக்கான பருவங்கள்
காப்பு
செங்கீரை
தால்
சப்பாணி 
முத்தம்
 வாரானை
அம்புலி
சிற்றில்
சிறுபறை
சிறுதேர்
பெண் குழந்தைக்கான பருவங்கள்
ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் முதல் 7 பருவங்கள் ஒன்றாகவே வரும். பெண் குழந்தைகளுக்கு கடைசி 3 பருவங்கள் மட்டும் மாறுபட்டு வரும்.
8. கழங்கு 9. அம்மானை 10. ஊஞ்சல்
ஆண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 முதல் 7 வயது  வரையிலான பருவம் –  பாலன் * 8 முதல் 10…
View On WordPress
0 notes
tamilcinema7 · 5 years
Text
ஜிம்பப்வேக்கு தடை விதித்தது ஐசிசி - வீரர்கள் புலம்பல் !
ஜிம்பப்வேக்கு தடை விதித்தது ஐசிசி – வீரர்கள் புலம்பல் !
ஜிம்பாப்வே அணியின் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி அந்நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது பொலிவை இழந்தது. கடந்த சில பத்தாண்டுகளாகவே உப்புக்கு சப்பாணி அணியாகவே இருந்து வந்த ஜிம்பாப்வே அணி இந்தாண்டு உலகக்கோப்பைக்கு தகுதிப்பெறவில்லை.இந்நிலையில் அந்நாட்டு அணியில் ஜிம்பாப்வே அரசின்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Text
கமல்ஹாசனின் ’அந்த படத்தை’ ரீமேக் செய்ய ஆசை - விக்ரம்’ ஓபன் டாக்’
கமல்ஹாசனின் ’அந்த படத்தை’ ரீமேக் செய்ய ஆசை – விக்ரம்’ ஓபன் டாக்’
கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான 16 வயதினிலே படத்தை ரீமேக் செய்து, அதில் சப்பாணி வேடத்தில் நடிக்க ஆசை என்று நடிகர் விக்ரம் தெரிவித்தார். நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரம் நடித்திருக்கும் படம் கடாரம் கொண்டான். இதில் கமலின் கமல் அக்‌ஷரா ஹாசன் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.   இப்படத்தின்…
View On WordPress
0 notes
fakirmohamedlebbai · 1 year
Photo
Tumblr media
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் 11-02-2023 நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணக்காடு சப்பாணி என்பவரின் அறுவை சிகிச்சைக்காக SDPI கட்சி மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஹுசைன் ஏற்ப்பாட்டில் கஸாலி மெடிக்கல் உரிமையாளர் ஷேக் முகமது அவர்களால் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் எஸ். டி. பி. ஐ கட்சியின் பாளை பகுதி தலைவர் நிஜாம்,கே. டி. சி நகர் கிளை தலைவர் முஹம்மது ஹாரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர். SDPI கட்சி மருத்துவ உதவி மற்றும் இரத்ததான சேவை அணியில் தங்களையும் இணைத்து கொள்ள மற்றும் அவசர ரத்ததான தேவை தொடர்புக்கு 9600207173-7092564120 9655922331-99526 97855 SDPI கட்சி மருத்துவ சேவை அணி நெல்லை மாநகர் மாவட்டம் . https://www.instagram.com/p/CokB3SsP5Qc/?igshid=NGJjMDIxMWI=
0 notes
dailyanjal · 4 years
Text
’சப்பாணி’, ‘மயிலு’, ’பரட்டை’, பரஞ்சோதி’, ‘பாஞ்சாலி’, ’முத்துப்பேச்சி’, ‘குருவம்மா’, ‘ஒச்சாயி கிழவி’, ‘பொன்னாத்தா’,’கருத்தம்மா’, ‘என் இனிய தமிழ் மக்களே..’; - இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள் இன்று | bharathirrajaa birthday
’சப்பாணி’, ‘மயிலு’, ’பரட்டை’, பரஞ்சோதி’, ‘பாஞ்சாலி’, ’முத்துப்பேச்சி’, ‘குருவம்மா’, ‘ஒச்சாயி கிழவி’, ‘பொன்னாத்தா’,’கருத்தம்மா’, ‘என் இனிய தமிழ் மக்களே..’; – இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள் இன்று | bharathirrajaa birthday
[ad_1]
தேவதூதர்கள் போல், சினிமா தூதர்களும் உண்டு. தங்களின் நூதனமான படைப்புகளால், கலையையும் கலாரசிகர்களையும் ஒருகோட்டில் இணைத்து, ஒருபுள்ளியில் இணைத்தவர்கள் இங்கே ஏராளம். பீம்சிங், ஏ.பி.நாகராஜன், பி.ஆர்.பந்துலு, எல்.வி.பிரசாத் என்று பல இயக்குநர்கள் சினிமாவுக்குள் வாழ்க்கையைச் சொன்னார்கள். இயக்குநர்கள் ஸ்ரீதரும் பாலசந்தரும் சினிமா எனும் தொழில்நுட்பத்தையும் வாழ்வியலையும் மன உணர்வுகளையும்…
View On WordPress
0 notes