Tumgik
pachaiboomi · 2 months
Text
ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!
மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது, இறைச்சிக்கு வளர்க்கப்படும் அல்லது மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளையே பெரும்பாலும் தாக்கும். இக்கிருமி இயல்பாகவே மண்ணில் பரவியிருக்கும். மேலும்,…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
மண்புழு உரத்தைச் சேமித்தல்!
மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில் சலித்து, நெகிழிப் பைகளில் அல்லது அடர் பாலி எத்திலின் பைகளில் சேமிக்கலாம். சேமிப்புக் கிடங்கின் வெப்பநிலை மிகாமலும், ஈரப்பதம் 20-40% க்குள்ளும் இருக்க வேண்டும். இதனால், தரம் குறையாமல் 3-5 மாதங்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?
அமெரிக்கா மற்றும் கனடாவில் பிறந்த மக்காச்சோளப் படைப் புழுக்களின் தாக்குதல், கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் 2018 மே மாதத்தில் முதன் முதலில் தெரிந்தது. அடுத்து, 2018 ஆகஸ்ட் மாதம், திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாகத் தாக்கியது. தாக்கும் பயிர்கள் மக்காச்…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
பருவநிலை மாற்றத்தில் பயறு வகைகள்!
பயறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பசுமை இல்லக் காற்று வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகள் 5-7 மடங்கு குறைவாகப் பசுமை இல்லக் காற்றை வெளியிடுகின்றன. இவை, காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிறுத்துவதுடன், தரமான கழிவுகளைக் கொடுத்து சத்துகள் சுழற்சிக்கும் நீர்ப் பிடிப்புக்கும் உதவுகின்றன. பயறு வகைகளில் உள்ள புரதம், மனித நலனில்…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
மா சாகுபடி!
நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின் மொத்த மா உற்பத்தியில் 65 சதம் வரை நம் நாட்டில் விளைகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1,30,000 எக்டரில் உள்ள மா சாகுபடி மூலம், சுமார் 6,73,000…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
தொழில் துறையில் பயன்படும் முருங்கை!
முருங்கையின் தாயகம் இந்தியா. இதில் பல்வேறு சத்துகளும், மருத்துவக் குணங்களும் அடங்கி உள்ளன. இதன் இலை, தோல் எரிச்சல் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகும். இலைச்சாறு, இரத்தழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையைச் சமப்படுத்தும், குடற் புழுக்களை அழிக்கும். இந்த இலைச்சாறுடன் கேரட் சாற்றைக் கலந்து குடித்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும். இதைப்போல, பூ, காய் மற்றும் வேரிலும் மருத்துவக் குணங்கள் நிறைவாக உள்ளன.…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற தோட்டக்கலை மாணவர்கள்!
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களான, அபினேஷ், அபிஷேக், ஆதித்யா, ஆதித்யா யாதவ், அருள்குமார், பாலமுருகன், பாரத், போதியரசு, சிற்றரசு ஆகியோர், நத்தம் பகுதியில், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில், விவசாயிகளுக்கான வாழ்நாள் கல்வித் திட்டம் மற்றும் விவசாயிகள் வளர்ச்சிக்கான வாழ்நாள் தொடர் கல்வித்தளம் குறித்த…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
தென்னைநார்க் கழிவை மட்க வைத்தல்!
செய்தி வெளியான இதழ்: 2020 ஏப்ரல் தென்னையில் இருந்து கிடைக்கும் பொருள்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் எடுக்கப்படுகிறது. அப்போது, பெரியளவில் நார்க்கழிவு கிடைக்கும். இது தென்னைநார்க் கழிவு எனப்படும். இந்தியத் தென்னைநார் ஆலைகள் மூலம் ஆண்டுதோறும் 7.5 மில்லியன் டன் கழிவு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து 5 இலட்சம் டன் கழிவு கிடைக்கிறது. இதிலுள்ள மூலப் பொருள்களால், இது…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
நீங்கள் கேட்டவை - பகுதி 3 (கேள்விகளும் பதில்களும்)
கேள்வி: நான��� இப்போது வாழை நடவு செய்துள்ளேன். அதில் வெங்காயம் பயிர் செய்துள்ளேன். அதன் அறுவடை முடிந்ததும், கடலையைப் பயிர் செய்ய இருக்கிறேன். அதற்கு என்ன உரம் இடவேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும். – எம்.ஜெயவீரன், தெக்குப்பட்டு. பதில்: உங்களுக்கு வேண்டிய தகவல்கள் கீழே உள்ள கட்டுரைகளில் உள்ளன. நிலக்கடலையில் ஊடுபயிர் சாகுபடி! கேள்வி: இயற்கை முறையில் மாட்டின் கருப்பையைச் சுத்தம் செய்யவது…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!
வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில், பலவகை வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் குறிப்பாக, பாலில் கொழுப்பின் அளவு குறைதல், குறைவாக உண்ணுதல், இரத்தத்தில் கீட்டோன் மிகுதல், பால் காய்ச்சல், கருப்பை வீக்கம், மடிவீக்கம் போன்றவை…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!
வெப்பத்தைத் தாங்கி வளர்ந்து பயனைத் தருவது பலாமரம். பலாப்பழம் பறித்ததும் அல்லது பாதுகாத்து வைத்துச் சாப்பிட ஏற்ற, சதைப் பற்றுள்ள, நறுமணமிக்க, சுவை மிகுந்த பழம். பலா விதை வேக வைத்து அல்லது வறுத்துச் சாப்பிட சத்துமிகு உணவுப் பொருள். இந்த விதைகளில் இருந்து தயாராகும் மாவு, அடுமனை உணவுகள் மற்றும் இதர உணவுகளில் பயன்படுகிறது. இந்தியா, மியான்மர், சீனா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து,…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!
இந்தியளவில் உள்ள பழப்பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4 மில்லியன் டன் பழங்கள் கிடைக்கின்றன. இது, இந்திய மொத்தப் பழங்கள் உற்பத்தியில் 15 சதமாகும். இந்தியளவில் எலுமிச்சை மட்டும் ஆந்திரம், மத்திய பிரதேசம், மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, சத்தீஸ்கர்…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!
நம் நாட்டில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண் புழுக்களை பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண் புழுக்கள் மண்ணில் இயல்பாகவே இருக்க வேண்டும். ஆனால், இராசயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாகத் தெளிப்பதால் மண் புழுக்கள் குறைந்து விட்டன. அதனால், மண்வளம் காக்க, மண்புழு…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!
பருவநிலை மாற்றம், குறைவான மழை நாட்கள் மற்றும் மழைப் பொழிவு, நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகிய காணங்��ளால், தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சீரான பாசனத்தைக் கொடுக்க முடியவில்லை. உலகில் 70 சத நீர் வேளாண்மைக்குப் பயன்படுகிறது. 2030 இல் உலக நீர்த் தேவையின் காரணமாக 50 சத நீரே கிடைக்கும். எனவே, நீரைச் சேமித்துச் சிக்கனமாகப் பயன்டுத்துவதே சாலச் சிறந்தது. இந்தச் சூழ்நிலைக்குப் புத்துயிர் ஊட்டுவது…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
நாவல் சாகுபடி!
நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்திய தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில் படர்ந்தும் இம்மரம் வளரும். அழகான நாவல் மரம், பூங்கா மற்றும் சாலையோரங்களில் நிழலுக்காகவும், காற்றைத் தடுக்கவும்…
Tumblr media
View On WordPress
1 note · View note