Tumgik
bharathitalkies · 2 years
Text
Tumblr media
சும்மா கிடைத்ததா சுதந்திரம்
சுக்கா மிளகா
சும்மா கிடைத்ததா சுதந்திரம்
எத்தனை எத்தனை ஈகியர்களின்
போராட்டத்தில் கிடைத்தது இது.
மார்தட்டிக் கொள்வோம்
பெருமிதம் கொள்வோம்
இது சுதந்திரமென்று...
தண்ணீர் பானையை தொட்ட பிஞ்சை
இரக்கமின்றி அடித்துக் கொள்வர்.
ஊர் வழியே நடந்து சென்றால்
கட்டி வைத்து அடிப்பர்.
மீசை வைத்தால்
சிரசை அறுப்பார்கள்.
நியாயமான கூலி கேட்டால்
திருட்டு பட்டம் கட்டி கொல்லுவார்கள்.
காதலித்தால் தண்டவாளம்.
நியாயம் பேசினால் புல்டோசர்.
மீறினால் அம்மணமாய் ஊர்வலம்.
சும்மாவா கிடைத்தது இந்த சுதந்திரம்.
ட்வீட் பண்ணா சிறை
கேள்வி கேட்டா தேசவிரோதி
போராடினால் துப்பாக்கிச் சூடு
சொல்லிக் கொள்வோம் சுதந்திரமென்று.
சமூக விடுதலையின்றி
சுதந்திரம் என்பது பெயரளவில் தான்.
விவசாயத்துக்கு வழி இல்ல.
வேலைக்கும் திண்டாட்டம் தான்.
கூலிக்கு மாரடிக்கும் பொழப்பு தானிங்கு
ஒயிட் காலரா இருந்தாலும்
ப்ளு காலரா இருந்தாலும்.
எல்லாத்துக்கும் ஒரே வரி
நெத்திக்காசுக்கும் ஜிஎஸ்டி கட்டனும்
உஜாலா உல்லாலா என்பார்கள்
சிலிண்டர் விலை அதிகமா இருக்குனா
அடுப்புக்கு மாறிக்கோனு சொல்லுறது
அம்பானி பட்ஜெட்
வெங்காயம் வெள்ளைப்பூண்டு
அதெல்லாம் ஏன் சாப்பிடுற
அதான்டா அதானி பட்ஜெட்
பொருளாதார சுதந்திரம் தான்
மானுட குல விடுதலை
எதுவுமே இல்லை.
எனவே
சும்மா சொல்லிக்குவோம்
இது சுதந்திரமென்று
சுக்கா மிளகா சுதந்திரம்
முதல்ல ஜிஎஸ்டி கட்டிடு.
கொடிய வாங்கு முதல்ல
அப்புறம் தான் உனக்கு ரேசன்
சோத்துக்கு வழியில்ல
சத்தமா சொல்லுடா
பாரத் ***** ஜே
- பாரதி ஆ.ரா
(15 August 2022)
#independenceday #india #multiculturalism #heterogeneous #homogeneous #patriotism #facism #bharathi #bharathitalkies
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
What I have lived for 🌻💛
அபத்தங்களின் அழகியல் தான் இவ்வாழ்வு.
துயரங்களின் சிம்பொனி
மகிழ்ச்சியின் தூறல்
காயத்தின் விசும்பல்கள்
எல்லாம் சேர்ந்தது தான் வாழ்வு
#existentialism #bertrandrussell #humanlife #longing #love #knowledge #agony #anguish #pity #absurdity #aesthetic #bharathi #bharathitalkies
1 note · View note
bharathitalkies · 2 years
Text
Tumblr media
"I am a Mountain.
You call, I echo."
~Rūmī ♡♡♡
சோசியல் மீடியால என்னத்தையாவது எழுதிட்டு கீழ ரூமி னு பேர்போட்டுக்கிறது பழக்கமா ஆச்சி. இதுவும் அப்படி translate பண்ணதுதான்.
"நான் மலை
நீ அழை, நான் எதிரொலியாவேன்"
இத இப்படியே மொழி பெயர்க்கலாம்.
ஆனால் ரூமியின் ஆங்கிலத்தின் மொழிபெயர்க்கப்பட்ட இந்த வாக்கியத்தினை மனதில் செரிப்பதற்கு இன்னும் கூட காலம் போதவில்லை.
இதே வரியை நா. முத்துக்குமார் கூட எழுதி இருப்பார்.
"ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வேன்"
அன்பின் பைத்தியக்காரத்தனங்களுக்கு சிகப்பு கொடிகள் 🚩 பொருட்டல்ல.
இப்படிலாம் பேசுனா toxic, ஒரு செடி ஒரு பூ னு விழும் வசவுகளையும் மலையை போல கேட்டுக் கொள்கிறேன்.
I am a Echo
பெரிய மலையுச்சிகளில்
விடியலின் ஒளி வீசுகின்றது
வசந்தத்தின் முதல் பூ மலர்கின்றது.
பெரும் பாறைகளிடையே
உன் குரல் எதிரொலிக்கின்றது
பெரும் மௌனம் கலைகின்றது.
வனங்களின் ஆதி இசை தொடங்குகின்றது.
விடியலாய்
எதிரொலியாய்
உன் குரலெடுத்து
அழைத்துவிடு
ஒரு பூவாக
ஒரு இசையாக
நான் உன்னிடம் வருவேன்.
- பாரதி ஆ.ரா
#rumi #rumipoem #rumiquotes #tamiltranslation #tamilquotes #namuthukumar #nenjodukalanthidu #ilayaraja #echo #mountain #wanderer #bharathi #bharathitalkies
1 note · View note
bharathitalkies · 2 years
Text
Tumblr media
இயல்பான விந்தை
அடித்தவர்களிடமே
ஏன் அடித்தாய் என
மடிசாய்ந்து அழும் மனதிற்கு
இவ்வுலகின் இயல்பும் விந்தை தான்
- பாரதி ஆ.ரா
#tamilwriting #randomthoughts #regret #noregrets #mentalhealth #woundedbaby #selfhealing #bharathi #bharathitalkies
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
காதல் சாதல் ரெண்டும் ஒன்று
அந்த சொர்க்கம் காண
#charlesbukowski #tamilwriting #tamiltranslation #poem #tamilpoem #tamilkavithaigal #tamilpoetry #bharathi #bharathitalkies
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
இந்த காதல் 🌻💛
நாமே மிகச் சிறியதும், மிகப் பெரியதும்
நாமே இரண்டுக்கும் இடையேயான பாதை
#tamilwriting #tamilkavithaigal #tamilpoetry #tamilpoem #lovepoems #relationship #breakup #breakuppoetry #bharathi #bharathitalkies
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
இழந்த காதல் 💔
காதலிலே நம்மை நாம் இழந்தோம்
பிடித்த ஒரு விஷயமே
பின் ஒரு நாளில் வெறுப்பதற்கும்
காரணமாக இருந்தது.
உனக்கு பிடித்த நான்
எனக்கு பிடித்த நீ
இவர்கள் காதலித்தார்கள்.
நான் தேடும் நீ
நீ தேடும் நான்
வேறுவேறாக இருந்தோம்.
தேடல்கள் முழுமையடையவில்லை.
உனக்கு பிடித்த நீ
எனக்கு பிடித்த நான்
புரிதலின்மையால்
சண்டையிட்டார்கள்.
இறுதியில்
நீ வெறுக்கும் நான்
நான் வெறுக்கும் நீ
பிரிந்தோம்.
நம்மை நாம் தொலைத்தோம் இக்காதலில்.
- பாரதி ஆ.ரா.
#tamilpoem #tamilpoetry #tamilwriting #lovepoems #breakuppoetry #relationshipissues #understanding #bharathi #bharathitalkies
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே 🌻
சிரிய தேசத்து கவிஞர் நிசார் கப்பானி
Nizar Tawfiq Qabbani
(21 March 1923 - 30 April 1998)
இவரது கவிதைகள், காதல், காம உவகை, பெண்ணியம், அரபு தேசியம் மற்றும் ஆன்மீக கருத்துகளை எளிமையாகவும் ரசனையுடனும் வெளிப்படுத்தும் தன்மையுடையது. அரபு உலகின் மிக முக்கியமான கவிஞர். சிரியாவின் தேசிய கவியாக கருதப்பட்டவர்.
இவரது இளம் பருவத்தி��், இவரது அக்கா, தான் காதலிக்காத ஒரு நபரை மணந்து கொள்ள மறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு சமூகத்தில் புரையோடியிருக்கும் பழமைவாதமும் பிற்போக்கு தனங்களுமே காரணம் என உணர்ந்து அதை எதிர்த்து போராட எண்ணம் கொண்டார்.
அரபு உலகில் காதல் என்பது சிறைபட்ட பறவை போல உள்ளது, அதை விடுதலை செய்ய விரும்புகிறேன் என்றார்.
அரபு மக்களின் ஆன்மா, உணர்வுகள், உடல்கள் ஆகியவற்றிற்கு கவிதைகள் மூலம் விடுதலை தேடுகிறேன். இந்த சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன உறவு என்பது ஆரோக்கியமற்ற ஒன்றாக உள்ளது.
இவரது கவிதைகள் காதல் மூலம் இறைமையை கண்டடையக் கூடியது.
- பாரதி ஆ.ரா
#syrianpoet #nizarqabbani #nizarqabbanipoetry #arabpoetry #arabliterature #eroticpoems #lovepoems #arabnationalism #tamiltranslation #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #bharathi #bharathitalkies
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
பிரிவின் வெளிச்சம் 🔆🌻
இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞர்களில் ஒருவர், அன்னா அக்மதேவா Anna Akhmatova (1889 - 1966) இரஷ்யாவைச் சார்ந்தவர். இவர் எழுதிய இரங்கற்பா (Elegy) வகை கவிதைகள் மிகப் பிரபலம்.
Acmeism என்ற இலக்கிய அமைப்பின் தாக்கத்தில் உருவான கவிஞர். இரசியாவில் 1912 ல் உருவான ஒரு இலக்கிய அமைப்பு இது. இதை நிகோலோய் குமிலேவ் மற்றும் செர்கை கொரோடெட்ஸ்கி ஆகியோர் தொடங்கினர். இதில் நிகோலோய் குமிலேவ் அன்னா அக்மதேவாவின் முதல் கணவர்.
Acmeism என்ற இலக்கிய அமைப்பு மனித உணர்வுகளை முன்னிறுத்தி படைப்புகளை படைத்து வந்தனர். கிரேக்க சொல்லான άκμη (ákmē) என்பதில் இருந்து உருவானது இந்த அமைப்பின் பெயர். மனிதர்களின் காலம் எனப் பொருள்தரும் சொல் அது.
அக்மதேவா வின் கவிதைகள் காதல், உறவு பற்றியதாக இருந்தது. காதலும் துயரமும் தான் இவர் கவிதையின் பாடுபொருள்.
In Dreams
Black and enduring separation
I share equally with you.
Why weep? Give me your hand,
Promise me you will come again.
You and I are like high mountains
and we can't move closer.
Just send me word,
At midnight sometime through the stars.
.
தமிழில்: பாரதி ஆரா
#russianliterature #russianpoerty #russianpoet #annaakmatova #acmeism #tamiltranslation #loveandrelationship #elegy #bharathi #bharathitalkies
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
கவிதை ஓவியம் 🌻💛
இரஷ்யாவின் தலைசிறந்த கவிஞர் அலெக்சாந்தர் புஷ்கின்
(Alexander Pushkin)
1799 - 1837
நார்வேஜியன் ஓவியர்
எட்வர்ட் மூன்ச் (Edvard Munch)
(1863- 1944)
Expressionism artist
1891ல் வரையப்பட்ட ஓவியம்
Melancholy (மனத்துயர்)
ஒரே உணர்வை கவிதையும் ஓவியமும் ஒன்று போல கடத்துகின்றது.
மொழிகளும் வண்ணங்களும் உணர்வுகளின் ஊடகம்.
உணர்வுகள் என்பது மனித வாழ்வின் சாரம். அது தான் மனிதனை வாழத் தூண்டுகிறது. கலையை உருவாக்குகிறது. இரசனையை மேம்படுத்துகிறது.
- பாரதி ஆ.ரா
#alexanderpushkin #edwardmunch #melancholy #poetry #poem #painting #art #artandliterature #artandlife #expressionism #romanticism #bharathi #bharathitalkies
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
என் வானிலே ஒரே வெண்ணிலா
1 note · View note
bharathitalkies · 2 years
Text
Tumblr media
Director Rajumurugan meets Vincent Van Gogh
Encampment of Gypsies with Caravans 1888
Gypsy, 2019 (Starring Jeeva and Nikisha Sharma)
“the frieze of figures, vehicles and horses…seems designed to emphasise the flatness of the landscape. Only the tree at right and the scrubby vegetation at left offer refuge from the sun. The empty foreground adds to the feeling of harsh desolation, a suggestion, perhaps, of the peripheral position of gypsy people. The intensity of the light suggests the glorious palette of works to come…” Lucina Ward
There was a long tradition of gypsies living in the area surrounding Arles and into the wilds of the Camargue, and Van Gogh would have been drown to what he perceived as their romantic and exotic life. The brilliant colours he painted them in parallels their rich and exciting culture, which was one that spanned many hundreds of gears.
There is an analogy to be drawn also between the gypsy and their isolated existence beyond the frame of a static community such as the town, and Van Gogh's own exclusion from the social network within Arles. His strange behavior, and at times bizarre appearance had quickly set him apart from the conservative rural community, who were later instrumental in the artist leaving Arles. Van Gogh longed for the company of other artists and like-minded people, and felt totally cut off in Arles. He kept in touch with the art scene in Paris through his brother Theo, and corresponded with some of his artist friends including Paul Gauguin and Bernard, but the lack of social contact heightened his despondency and depression.
3 notes · View notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
0 notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
I have tried to show the cafe as a place where one can go mad.
~ Vincent Van Gogh
2 notes · View notes
bharathitalkies · 2 years
Text
Tumblr media
அரளிவிதை பாசக்காரி 💛
Paruthiveeran and Muthazhagu in Starry Night over the Rhone
Director Ameer sulthan meets Vincent Van Gogh 1888
Follow @bharathi_talkies 🎥 🎶 🎬
3 notes · View notes
bharathitalkies · 2 years
Text
ஐந்து காதல் மொழிகள் - 5
Acts of service
(சேவை புரிதல்)
தன் இணையருக்கு துணையாய் இருத்தல். அவர்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் நோக்கி பயணிக்க துணையாய் இருப்பது தான் சேவை.
சின்னச் சின்ன பணிவிடைகள், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியன அன்பின் மொழியில் இசை சேர்க்கும்.
காபி கொடுத்து காலை எழுப்பி விடுதல், மாதவிடாய் நாட்களில் கால்களை பிடித்து விடுதல், ஷாப்பிங் போது கைப்பைகளை சுமப்பது, சுகவீன நாட்களில் உடனிருப்பது போன்ற செயல்கள் தன் துணையின் மீதான காதலை வெளிப்படுத்தும்.
எல்லா சூழலிலும் தன் இணைக்கு எப்போதும் துணையாய் இருப்பதே காதலின் ஜீவித மொழி.
கடற்கரை மணல் போல
உன் பயணத்தில் என்றும்
உன் பாதத்தோடு துணையாய் இருப்பேன்.
இது தான் காதலின் மொழி.
இசைபட (கா த இல்) இல்லறம் வாழ்க
The Rain, Vincent Van Gogh
Nanum Rowdy Than, Vignesh Sivan
(Vijay Sethupathi, Nayanthara in Van Gogh's Rain)
Disclaimer: © All copyrights to the respective owners
Follow @bharathi_talkies 🎥 🎶 🎬
#anirudhravichander #kannanakanne #nanumrowdythan #vijaysethupathi #nayanthara #vigneshsivan #seanroldan #anirudhmusic #therain #vincentvangogh #vangoghart #vangogh #vangoghartlover #fivelanguagesoflove #garrychapman #relationship #bharathi #bharathitalkies
2 notes · View notes
bharathitalkies · 2 years
Text
ஐந்து காதல் மொழிகள் - 4
பரிசு பகிர்தல்
(Receiving Gifts)
ஒரு அன்பில் அதிகபட்ச எதிர்பார்ப்பு, விலையுயர்ந்த பொருட்களை விட அன்பிற்குரியவர்களுக்கான மெனக்கெடல்கள் தான். அவருக்காக அலைந்து திரிந்து அவருக்கு பிடித்த மாதிரியான ஒரு சின்ன தோடு கூட விலை மதிப்பில்லாத ஒன்றாக கருதுவார்கள். பின்னாளில் தங்க நகை வாங்கித் தந்தால் கூட இல்லாத பிணைப்பு அவர்களுக்கான சின்னச் சின்ன மெனக்கெடலில் வாங்கித் தருகின்ற சிறிய பரிசுகள் அதிக நெருக்கத்தை உண்டு பண்ணும்.
தன் நேசத்துக்குரியவர்களுக்கு ஒரு பரிசுப் பொருளை வாங்குவதென்பதே பெரிய போராட்டம். என்ன வாங்கலாம் என பெரிய குழப்பம் உண்டாகும்.
என்ன பொருள், எவ்வளவு விலையில் கொடுக்கின்றோம் என்பதைவிட எவ்வளவு காதலோ���ு கொடுக்கிறோம் என்பதில் அந்த பரிசு முக்கியத்துவம் பெறுகிறது.
என்ன பரிசு வாங்கலாம் என குழப்பத்தில் உள்ள காதலனுக்கு, தாமரை பாட்டு எழுதுகிறார்.
"அந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பேய் மழை
இந்நிலை சொல்லுதே, என் காதலின் வானிலை
ஒரு முறை ஒரு முறை, என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட, அது கதைப்பதை கேளாயோ"
Atharva and Amala Paul meet in Van Gogh's painting
Disclaimer: © All copyrights to the respective owners
Follow @bharathi_talkies 🎥 🎶 🎬
#gvprakashkumar #orumurai #atharva #amalapaul #muppozhuthumunkarpanaigal #thamarailyrics #thamarai #fivelanguagesoflove #relationship #gift #vincentvangogh #vangoghart #vangogh #vangoghartlover #bharathi #bharathitalkies
1 note · View note