Tumgik
#உச்சநீதிமன்றம் தமிழகஅரசு
tamilsnow · 4 years
Text
உள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி
உள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி
திமுக உள்ளாட்சித் தேர்தல் விசயமாக சில கேள்வி எழுப்பி  தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு புதிய மாவட்டங்கள் பிரித்தது குறித்து  சரமாரியாக கேள்வி எழுப்பியது.
ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. நகர உள்ளாட்சிப் பகுதிகளுக்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வார்டுகள் மறுவரையறை…
View On WordPress
0 notes
Text
Tumblr media
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்! விடுதலைச்சிறுத்தைகள் கோரிக்கை!
~~~~~~~~~~~
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்குத் தடையில்லை என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
தென்பெண்ணை ஆறு தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பாய்ந்தோடிக் கடலில் கலக்கிறது. ஆற்றின் மொத்த நீளமான 432கிமீ தூரத்தில் 320கிமீ தமிழகத்திலும் 112கிமீ கர்நாடகத்திலும் பாய்கிறது. இந்நிலையில் குடிநீர் தேவைக்கென கர்நாடக அரசு தமிழகத்தின் இசைவில்லாமலே எல்லையோரத்தில் தடுப்பணை கட்டும் பணிகளைத் தொடங்கியது. அதனை எதிர்த்துத் தமிழகஅரசு தொடுத்த வழக்கையே தற்போது உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே
50 அடி உயரத்தில் தடுப்பணை கட்டினால் தமிழகத்திற்கு முற்றிலுமாக நீர்வரத்து இருக்காது. காலப்போக்கில் ஆறு வறட்சியடைந்தால் மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் மக்கள் திண்டாடும் நிலை உருவாகும். நிலத்தடி நீர் வளமும் குன்றிப்போகும். அதாவது, அம்மாவட்டங்களில் நீராதாரமும் பிற வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
1892 நீர்பங்கீடு ஒப்பந்தத்தில், நதிப் பாய்ந்தோடும் மாநிலங்களின் ஒத்திசைவு இல்லாமல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளிட்ட எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், கர்நாடகாவின் இத்திட்டத்துக்குத் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமலேயே ஒப்புதல் அளித்தது. இது அப்பட்டமான தமிழர் விரோத நடவடிக்கையாகும். தற்போது உச்சநீதிமன்றமும் தமிழருக்கு விரோதமாகத் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில், உடனடியாக இதனை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீட்டு நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில்
மீளாய்வு மனு தாக்கல் செய்யவேண்டுமென
கேட்டுக்கொள்கிறோம். மேலும், கர்நாடக அரசுக்குச் சுற்றுசூழல் அமைச்சகம் அளித்துள்ள ஒருசார்பு ஒப்புதலைத் திரும்பப்பெற வேண்டுமென
மைய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விசிக.
0 notes
tharaipitha-blog · 6 years
Photo
Tumblr media
மோடியரசு 3 மாத அவகாசம் கோருவது தமிழகத்தை வஞ்சிக்கும் உள்நோக்கம். 6 வாரத்தைக் கடத்தி மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் அதிர்ச்சி! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 24 மணி நேர அவகாசமே அதிகம். மத்திய அரசின் தமிழக விரோதப்போக்கு வன்மையான கண்டனத்தற்குரியது. அவகாசம் தர தடைவிதிக்கக் கோரி தமிழகஅரசு மனு செய்ய வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது இது முதல் முறையல்ல. 21.9.16ல் மேலாண்மை வாரியம் அமைக்க இதே பாஜகஅரசு மறுத்தது. உச்சநீதிமன்றம் மீண்டும் மத்திய அரசுக்கு அவகாசம் தரக்கூடாது. அமெரிக்க வெள்ளை மாளிகையைவிடவா மெரினா? உங்க அடிமை புத்திக்கு ஒரு அளவு வேண்டாமா? காவிரி: மெரினா புரட்சியை அடக்க போலீஸ் குவிப்பைக் கண்டிப்போம்! அனுமதி காவிரியை காவிகளிடம் இருந்து மீட்கும் மெரினா போரை! மெரினா தீ மேதினியெங்கும் பரவட்டும்.
0 notes